எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் இன்றைய நிலையைப் பற்றி ஒரு வார இதழில் படித்தேன். விஸ்ராந்தியில் இருக்கிறாராம். அது சென்னையில் உள்ள ஒரு முதியோர் இல்லம்.
துணைக்கு யாருமே இல்லையாம். யாராவது உதவமாட்டார்களா என்று கேட்டிருக்கிறார், நப்பாசையுடன். ஆடிப்போய் விட்டேன்.
எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். பந்தா சற்றும் இல்லாதவர். பெண்கள், அடித்தட்டு மக்கள், தலித், என்று எல்லாவித முற்போக்கு இயக்கங்களுடனும், தன்னைத் தயங்காமல் இணைத்துக் கொள்வார்.
அவரது புதினங்கள் பாவப்பட்ட, சுரண்டப்படும், ஏமாற்றப்படும், மக்களின் நிலையினை, கவர்ச்சி முலாம் எதுவும் பூசாமல், மிகைப்படுத்தாமல் படம் பிடித்துக்காட்டும். மனசாட்சியுடையோர் நெகிழ்ந்துவிடுவர்.
உற்றதுணையாக இருந்த கணவர் இறந்த பிறகு, குழந்தை எதுவும் இல்லாத நிலையில்,சுற்றத்திடம் இருந்ததையெல்லாம் இழந்துவிட்டு, நிர்க்கதியாக இருக்கிறாராம் ராஜம் கிருஷ்ணன்.
இரு நண்பர்கள் உதவியில்தான் முதியோர் இல்லத்திலேயே சேர்ந்திருக்கிறார்.
அநீதியும் அக்கிரமும் மலிந்த இவ்வுலகில், இன்னார்தான் துன்பப்படவேண்டும் என்ற நியதி ஒன்றுமில்லைதான். படித்துவிட்டால்...சிறப்பாக எழுதிவிட்டால்.... அலலுறக்கூடாதா என்ன?
ஆனாலும், கருணாநிதிகளும், ஜெயலலிதாக்களும் கொழிக்கும்போது, ராஜம் கிருஷ்ணன்கள் துன்பத்தில் நோகிறார்கள் என்றால்?....மனதைப் பிசைகிறது.
நண்பர்கள் ஒன்று சேர்ந்து அவரை சந்திக்கப் போகலாம். யாராவது ‘பெரிய’ மனிதர் ஆதரவைப்பெறலாம். ராஜம் கிருஷ்ணன் எப்படி வாழ விரும்புகிறாரோ, அப்படியே அவர் வாழ்வதற்கு உதவ, நாம் முயற்சிக்கலாம்.
இதெல்லாம் கொடுமை. என்ன செய்ய?
நம்மால் முடிந்து என்று எதையாவது செய்துதான் ஆகவேண்டும்.
5 comments:
மனதைக் கனக்க வைக்கும் பதிவு. நிச்சயமாக அரசு ஏதும் செய்யாது. தமிழ்நாடு பிராமணர் சங்கம்கூட ஏதாவது செய்யும்.. அவர் சார்ந்திருந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இவரைக் கண்டுகொள்ளாது என்பது நிச்சயம். நம் சமூகம் எவ்வளவு கேவலமானது என்பதற்கு இன்னொரு சாட்சி இது.
// மனசாட்சியுடையோர் நெகிழ்ந்துவிடுவர்.
நிஜம் தான்.
இவரின் ஒரு கதையை இணையத்தில் படித்தேன். தலைமுறைகளைத் தாண்டி நெகிழ வைத்த கதை ”அஞ்சாமை” என்ற அது. இங்கே : http://www.dinamani.com/Malar/ShortStories/Collection_6/Story_7.asp
This is tragic,most appaling. I dont think this a case to play sordid dramas like the one Kattiyakkaran playing here (Rather we can call him Kalavarakkaran. the legacy of progressive writers association is to stand above petty caste politics and the TAMBRAS is not known for helping writers like Ms.Krishnan). WE SHALL FOCUS ON HOW WE CAN SHOW OUR SOLIDARITY WITH THE SUFFERING WRITER WHO ASPIRED WELL BEING OF THE SOCIETY.
I will discuss with some of the literary friends and good hearted fellows since whatever I could contribute would not be sufficient.
ஸ்பாயில்ஸ்போர்ட், இப்பெண்மணி எழுதிய நாவல்களுக்கு ராயல்டி என்று எதுவும் கிடையாதா?
முழு நேர எழுத்தாளர்கள், அந்திம காலத்தில் ஆதரவில்லாவிடில் வரும் சோகத்தை மனக்கண்ணில் முன்னரே காணவேண்டும்.
Post a Comment