Tuesday, September 16, 2008

மேலும் அண்ணா பற்றி... தோழருக்கு நன்றி!

பரவலாகக் காணப்படும் எழுத்துப் பிழைகளுக்காக வருந்துகிறேன். பழக வேண்டும்.
அண்ணா அப்படி ஒரு மாபெரும் சமுக மாற்றத்திற்கு வழி செய்திருக்கிறார் என்றால் அதை போகிற போக்கில் சொல்லிவிட்டு, எப்படியும் நடந்திருக்கலாம் என்று கூறி தப்பித்துக் கொள்வது அறிவு நாணயமாகுமா? மிக நெருக்கமான், நான் மிக மதிக்கும் ஒரு நண்பர் கேட்டார்.

சரியான கேள்வி தான். என் விளக்கம் இதோ :

அண்ணா கட்சியை வளர்த்தபோதும் சரி, ஆட்சியில் இருந்த குறுகிய காலத்திலும் சரி, உண்மையான சாமானியர்கள், ஆட்சி வேண்டும் என்பதற்காக அவர் எவ்வித திட்டத்தையும் வைத்ததாகத்
தெரியவில்லையே.

பார்ப்பன ஆதிக்கம் ஒழியவேண்டும், தி.மு.
வளரவேண்டும், ஆட்சியைப் பிடிக்கவேண்டும், என்று நினைத்தார். அதெல்லாம் சரி, அவரது செயல் திட்டம்என்ன, எந்த வகைப்பட்ட பிராமணரல்லாதார் ஆட்சி? அடித்தட்டில் இருப்போர் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது சரி, அதன் வழியாக உண்மையான சமுக மாற்றத்தை எப்படி கொண்டு வருவது, எப்படிப் பட்ட சமுகம் முதலில் வேண்டும் இதைப் பற்றி அவர் எங்கும் தெளிவாக பேசியதும் இல்லை, எழுதியதும் இல்லை. அவர் என்ன, பெரியாரே சொல்லவில்லையே!

பார்ப்பன எதிர்ப்பு உணர்வைப் பயன்படுத்தி ஆட்சியைக் நினைத்தார்கள், அவரது சகாக்களும், பக்தவதசலம் போன்றோரின் மமதை, அரிசி பிரச்சினை, இந்தி எதிர்ப்பு, இவையும் அப்போது தி.மு.க.விற்கு கை கொடுத்தன.

(அத்தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு காங்கிரஸ் அனுதாபி, வெங்கட்ராமனை அணுகி, திமுகவிற்கு அனுதாபம் பெருகிக்கொண்டிருக்கிறது, அரிசிப பிரச்சினை காரணமாக மக்கள் கடுங் கோபத்தில் இருக்கிறார்கள், இது நமக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல என்ற ரிய்தியில் பேசியிருக்கிறார். ஆர்.வியின் எகத்தாளமான பதில் - "ஜனநாயகமா, சாப்பாடா, மக்களே முடிவு
செய்துகொள்ளட்டும்..." பின்னால் அந்த நபர் குமுறி எழுதியிருந்தார். )


ஆக தெளிவாக வரையறுக்கப்பட்ட எத்திட்டத்துடனும் அண்ணா செயல்படவில்லை, ஒன்று.

இரண்டு, ஆட்சிக்கு aவந்த பிறகும சரி சாமானியர்கள் உண்மையாகவே அரசியல், பொருளாதார அதிகாரத்தை பெற என்ன செய்யவேண்டும் என்று எந்த சந்தர்ப்பத்திலும் அவர் கவலைப் பட்டதாக தெரியவில்லை. உட்கட்சி ஆவணம் எதுவும் இல்லையே.

தவிரவும் கீழ் வெண்மணி, அவருக்கு ஓர் ஆசிட் டெஸ்ட். என்ன செய்தார்? நழுவினார், சரியாக சொல்லவேண்டுமானால், குடிசையைக் கொளுத்தியவர்கள் பக்கம நின்றார். அவரது ஆசானே என்ன சொன்னார், சூத்திரர்கள் ஆட்சியைக் கவிழ்க்க கம்யுனிஸ்டுகள் சதி என்றுதானே!

அப்புறம், மேலே குறிப்பிட்ட நண்பர் சுட்டிக் காட்டியதுபோல், திராவிட நாடு ஏன் உயிர் முஉச்சு என்றவர் எவ்வளவு எளிதில் அதைக் கைவிட்டார்?

உடன் இருந்தவர்கள் வாழ்க்கையில் முறையின்றி, கட்டுப்பாடின்றி நடந்துகொண்டபோது, கண்டும் கானாமல்தனே இருந்தார்.
அதுதானே இன்று பயங்கரமாக் வளர்ந்து தமிழர் எல்லோரையும் தலை குனிய வைத்திருக்கிறது.

எனவே எவ்விதத்திலும் அண்ணாவை கொண்டாடமுடியாது. சகித்துக் கொள்ளலாம்.

பின்னர் வந்த தலைமையுடன் ஒப்பிட்டால் எவ்வளவோ மேல். விட்டிற்கு மேல் கொள்ளிவைப்பவன் நல்லவன் என்ற கதைதான்.

மிக உயரிய நோக்குடன் உருவான ஓர் இயக்கம், முன்னோடிகளின்
தவறுகளால் ஓர் இழிவு சக்தியாக வக்கரித்தது பெரும் வரலாற்று சோகம்.












1 comment:

Anonymous said...

ஆர்.வி., பக்தவத்சலம் போன்றவர்களைத் தூக்கிக் கடாசியதுதான் அண்ணாவின் உண்மையான சாதனை என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால், இன்னமும் பண்ணையார்களின் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தி நமது மொழி இல்லை. தமிழ்தான் நம்முடைய மொழி என்ற உணர்வு சில பேருக்காவது வந்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வெளியில் சென்றால், உங்களுக்கு இந்தி தெரியாதா என்று கேட்டுவிட்டு துரோகியைப் பார்ப்பதைப் போல நம்மைப் பார்ப்பார்கள், அவர்களது மொழியை இந்தி விழுங்கிக் கொண்டிருப்பதை அறியாமல். இந்தியாவின் பிற பகுதிகளைவிட (தில்லி, மும்பை, கொல்கத்தா விதிவிலக்கு)தமிழர்களுக்கு சற்றுப் பரவலான பார்வை இருக்கிறதென்றால் அதில் அதில் திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானது. ஒரு சமூகம் பரவலாக வாசிக்க ஆரம்பித்தது 65க்குப் பிறகுதானே? திரும்பத் திரும்ப கீழ் வெண்மணி பற்றிச் சொல்கிறீர்களே, முதுகுளத்தூர் கலவரத்தின் போது தேவர் குலத் திலகம், லெனினின் உடன்பிறப்பு, ஸ்டாலினின் ரத்தத்தின் ரத்தம் ப. ஜீவானந்தத்தின் நிலைபாடு என்ன? திராவிட நாடு என்பது அடிப்படையிலேயே பிழையான கருத்தாக்கம். அதைக் கைவிட்டதுதான் சரி.