ஓரிரு விஷயங்கள் சுட்டிக்காட்ட மறந்துவிட்டேன். எவ்வித ஊழல் சர்ச்சையிலும் சிக்காதவர் அண்ணா. தனது சொந்த பந்தங்களுக்கு எதையும் செய்து கொடுக்கவில்லை. சண்டே இந்தியன் தமிழ் வார ஏடு அண்ணாவின் நினைவு சிறப்பிதழில் சுவையான சில செய்திகள் உண்டு, சில அபத்தம், எதற்குத்தான் புகழ்வதேன்றில்லை. ஆனால் பல அவரது எளிமையை, தொண்டர்களோடு சகஜமாக கலந்து உறவாடியதை, கெளரவம் பார்க்காமல் லாரியிலேல்லாம் பயணம் செய்திருக்கிறார். அவர் வந்து அவ்வளவு விரைவிலேயே இறந்ததால் நற்பண்புகள் சில கட்சியினரிடம் வளரும் வாய்ப்பில்லாமல் போனது. அதுவும் சோகமே.
No comments:
Post a Comment