"நான் வியக்கிற அளவுக்குத் திறமை படைத்தவர் ...
...ஒரு சிங்கம் ... இப்படியெல்லாம் என்னைப்பற்றி சொல்லுவார்.
உங்க வாய்சைப் பத்தி ரெண்டு நாளைக்கு முன்னால மனசாரப் பாராட்டினார் .. என்று அவர் வீட்டில் சொன்னார்கள்..."
குன்னக்குடிக்கு பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் அஞ்சலியாம் அது!
எண்பதுகளில் சி.சு. செல்லப்பா, அற்புதமான, எளிமையான மனிதர், மணிக்கொடி ராமய்யாவிற்கு ஓர் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினார். சில எழுத்தாளர்கள், நா.பா. உட்பட, பங்கு பெற்றனர்.
எல்லோருமே வாணி ரகப் பேச்சுதான். நாபா சற்று அடக்கி வாசித்தார். புஷ்பா தங்கதுரை தாங்கவில்லை. "என்னைப் போன்ற ஒரு பெரும் எழுத்தாளனைக் கண்டுபிடித்த பெருமை ராமய்யாவிற்கு உண்டு," என்று ஒரு போடு போட்டார் !
இந்தியன் எக்ஸ்பிரசில் அது குறித்து விமர்சித்து எழுதியிருந்தேன். முது பெரும் இலக்கியவாதி சிட்டி மனம் நொந்து கடிதம் எழுதினார். பல காலம் பாதுகாத்து வைத்திருந்தேன்.
நம் நாட்டில் பலரையும் வாட்டும் ஒரு வியாதி. குறிப்பாக இது கலாச்சாரத்துறையில் அதிகம். என்னே கலாச்சாரம்!

2 comments:
தமிழ்நாட்டில் நீக்கமற பரவியிருக்கும் வியாதி இது. நீங்கள் சுஜாதாவின் அஞ்சலிக் கூட்டத்திற்கு வந்திருக்க வேண்டும். அஞ்சலி செலுத்த வந்திருந்தவர்கள் சுஜாதாவைப் பற்றிப் பேசியதைவிட தங்களைப் பற்றிப் பீற்றிக்கொண்டதே அதிகம். நாம் செத்தால் நம்மைப் பற்றி எவனும் பாராட்ட மாட்டான். அதனால் இப்போதே இரண்டு வார்த்தை சொல்லிவைப்போம் என்ற முன் ஜாக்கிரதை உணர்வில் இப்படிச் செய்கிறார்கள் போலிருக்கிறது.
// நாம் செத்தால் நம்மைப் பற்றி
// எவனும் பாராட்ட மாட்டான். அதனால்...
ஹா ஹா.. :-)
இந்த கலாச்சார வியாதி என்னை அடிக்கடி சிந்திக்க வைத்ததுண்டு. அடிப்படையில், நம்ம மக்களுக்கு பேசவேத் தெரியாதோ என்று வருத்தம் வருகிறது. சில நேரம் பரிதாபமாவும் இருக்கிறது...
ஒருத்தர பாராட்டனுமுன்னு நினைக்கிறோம். ஆனா எப்படின்னு தெரியல. அதனால், நமக்கு அவருடன் நடந்த சொந்த அனுபவங்களில் இருந்து சுலபமாக ஒன்றை தேர்வு செய்து .... அது சுயபுராணம் என்பது கூட உணராமல் சொதப்பி.... ஐயோ!
அடுத்தவர் மேல் மரியாதை என்பது அறிவளவில் வராமல், மனதளவில் வருவதால் தான் ப்ரச்னையோ? ஹ்ம்ம்...
-விகடகவி
Post a Comment