திராவிட இயககத்தின் தோற்றமே தமிழ்க கலாச்சாரத்தின் வீழ்ச்சியின் துவககம் என ஜெயகாந்தன் ஒருமுறை எழுதியிருந்தார். இப்போதும் அவர் அப்படித்தான் நினைப்பதாகத் தோன்றுகின்றது, எத்தனையோ சமரசங்களை அவர் செய்துகொண்டிருந்தாலும்.
அதை நான் 60களின் இறுதியில் படித்த நினைவு.
அத்தகைய கண்ணோட்டமே எனக்கும அப்போது இருந்தது. இப்போதும் ஏறத்தாழ அப்படித்தான். ஆனால் சில முககிய விளககங்களுடன்.
என்னோடு எவ்வளவு பேர் பேசிவிடப்போகிறார்கள்? அத வேறு கதை!
அண்ணா நோய்வாய்ப்ட்டிருந்த நேரம் நான் கல்லூரியில் படித்துககொண்டிருந்தேன். தினசரி வானொலி செய்திககாக மாணவர்கள் கூடுவார்கள்.
திமுக அனுதாபிகள் கண்ணீர்விட்டு அழாத குறைதான்.
எனககு வேடிககையாக இருககும். இவர் என்ன ஆள் என்று இப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் என நினைப்பேன்.
ஒரு நாள் என்னப்பா பூட்ட கேசா எனககு நெருககமான ஒரு நண்பனிடம் சற்று உரககவே கேட்டுவிட்டேன். பளாரென்று விழுந்தது ஓர் அறை. டேய் அய்யரே.....உசிரோட வீட்டுககுப் போமாட்டே, என்றார் ஒரு மூத்தமாணவர். கண்கள் சிவந்து.
அண்ணாவின் இறுதி யாத்திரைக்கு அப்படி ஒரு கூட்டம். தமிழ்நாடே ஸ்தம்பித்தது. ரெயில் கூரையில் பயணம் செய்த 10/20 பேர் நெய்வேலி அருகே ஏதோ ஒரு பாலத்தில் தலை இடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். அதுகுறித்து கிருபானந்தவாரியார், இப்படியா செய்வார்கள் என்று அங்கலாய்கக, அவர் வீடுபுகுந்து அவரையே தாககிவிட்டார்கள். பின்னால் அவர் மன்னிப்புகேட்டார்.
இதெல்லாம் அவரது நூற்றாண்டில் நினைவுககு வருகிறது. அண்ணா ஒரு வரலாற்று நாயகர் ஒன்றும் இல்லை, பெரிதாக எதையும் நினைவு கூர்வதற்கு. கருணாநிதிககு மேலும் ஓர் வாய்ப்பு தனது விசுவாசத்தை காட்டிககொள்ள. அவ்வளவுதான்.
பெரியார், ஆயிரம் தவறுகள் செய்திருந்தாலும், அவரிடம் அடிப்படையில் ஒரு தார்மீக கோபம் இருந்தது, நேர்மை இருந்தது. அவரது இயககம் மட்டும் தோன்றியிருக்காவிட்டால், இன்னமும் பிராமணர்கள் கொட்டமடித்துககொண்டிருப்பார்கள். நிச்சயமாக சமூக நீதி நாயகர்தான் அவர்.
ஆனால் அண்ணா என்ன செய்ய நினைத்திருபபார்? ஊகிககமுடியவில்லை. தனிப்பட்ட முறையில் நல்லவர். அவ்வளவே. கோஷ்டி அரசியல் செய்யவேண்டிய அவசியம் அவருககு இல்லை. செல்வாககு இளைஞர்கள் மத்தியில் நிறையவே இருந்தது. அதைத்தாண்டி?
முதல்வராகயிருந்தபோது தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார்! மூன்றுமாதங்களுககோ என்னவோ ரூபாய்ககு மூன்றுபடி அரிசி போட்டார் என்று நினைவு.
1962. இந்திய ஒற்றுமைககாக திராவிட நாடு கொள்கையை கைவிட்டார். எமர்ஜென்சி கால கட்டத்தில் எம்.ஜி.ஆர் தனத கட்சியின் பெயரை அதிமுகவிலிருந்து அஇஅதிமுகவாககிய கதைதான்.
அண்ணாவின் பொருளாதாரக் கொள்கை என்னமோ ஒரு சோஷலிசம் என்பார்கள். மறந்துவிட்டது. அவரது ஒர சிறிய புத்தகம் பணத்தோட்டம். அதைச்சொல்லிககொண்டிருப்பார்கள். யாருககும் வலிககாமல் சமூக மாற்றம் வேண்டும் என்று சொல்லும். சமூகம் பற்றிய அரைவேககாட்டு புரிதல்.
தோழர் பி.ராமமூர்த்தி அதை விளாசு விளாசு என்று கிழித்திருப்பார் அவரதுஆரிய மாயையா, திராவிட மாயையா புத்தகத்தில்.
திராவிட இயகக பொருளாதாரத்தத்துவத்தை அடித்துப்போட மார்கசிய சமமட்டியா? கொஞ்சம் ஓவர் இல்லை?
யோசித்துயோசித்து பார்ககிறேன், பெரிதாக அதிகார துஷ்பிரயோகம் இல்லை, ஊழல் இல்லை, அடாவடி இல்லை, வேறு என்ன சாதனை?
ஆ, ஒன்றிருககிறது. அடித்தட்டு மககளும், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சாதியினர், அவர்களை தங்கள் ஆட்சி இது என்று எண்ணவைத்தது திமுகதான்.
காங்கிரசார் காலத்தில் பண்ணைகளை வைத்து, அவர்கள் மூலம், பெரிய மனிதர்கள் மூலம், அடிமைகளின் வாககுககளை பெறும் கயமைத்தனமான வழககம் ஒழிந்தது. அந்த அளவில் ஒரு சமூகப் புரட்சிதான் 1967
தேர்தல்கள்.
பெரியாரிடமிருந்து பிரிந்து வந்து தேர்தலில் போட்டியிட்டு இடைநிலைசாதியினர் அதிகாரத்தை கைப்பற்ற வழிவகை செய்தவர அண்ணாதான், மறுகக முடியாது.
ஆனால் காலப்போககில் அப்படிப்பட்டதொரு மாற்றம் தன்னளவில் நிகழ்ந்திருக்கலாம் அல்லவா? யாராவது ஒருவர் பிராமணரல்லாதாரின் வாககு வங்கியை புரிந்து கொள்ளாமலா யிருந்திருப்பார்கள்?
ஆட்சிககு வந்த பிறகு என்ன சாதித்தார் என்றால் ஒன்றுமில்லை. கீழவெண்மணி படுகொலைகள் போது, தலித் விவசாயககூலிகள் உயிரோடு எரிககப்பட்டபோது, பெரிதாக ஒன்றும நடவடிககை எடுத்துவிடவில்லை அன்றைய முதல்வர் அண்ணா.
இந்து பத்திரிகையில் ஒருவர் பெரிய்ய்.....ய கட்டுரை எழுதியிருந்தார். ஏதாவது புதிதாக இருககிறதா என்று முழுவதையும் படித்தேன்.
ஒரு குருர மகிழ்ச்சி, ஒன்றுமே இல்லையென்பதில்.
சடங்கு ரீதியான வாழ்த்துககள், அவ்வளவே. ஆனாலும் பாவம், மனிதர் ரொம்பவும் மெனககெட்டிருககிறார்.
எம். எஸ்.எஸ். பாண்டியனை விட்டிருந்தால் நிறையவே அளந்திருப்பார். எனககு இன்றைய இந்துவைப்பற்றிய மகிழ்ச்சியான ஒரே செய்தியே பாண்டியன் வகையறாககளுககு அங்கே இடமில்லை என்பதுதான்.
ஸ்டாலின் ஆட்சிதான். அது விகாரம்தான். ஆனால் சிகப்பாயிற்றே! சில நன்மைகளும் உண்டே! சில வித நகைச்சுவைககு இடமில்லை என்பதும் ஒருவித திருப்திதானே.
2 comments:
// யாருககும் வலிககாமல் சமூக
// மாற்றம் வேண்டும் என்று சொல்லும்
:-) கேட்க நல்லாருக்கு.
I really felt as if the write up was a reflection of what I have felt all these years. I have a strong feeling that Anna has been idolized beyond proportion. The so called devotion to him by naming every road, every locality, every bus stand, airport etc. etc. after him has shown the shallowness of the Dravidian Movement and its culture of hero worship for the selfish end of establishing oneself as his heir to be the ruling class! No common man - no voiceless and the faceless has ever benefited due to 'Annaism'. how I wish the youth of today atleast deviate from our ruling class propaganda and get at the truth. - Sudha Ramalingam
Post a Comment